இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் திருத்தங்களை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், புதிய வாக்காளர் பெயர் பட்டியலை www.elections.gov.lk என்ற இணையத்தளதில் பார்வையிட்டு தமது பெயரை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

