சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இன்றையதினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது.
சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் பிரதி அமைச்சர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திர கட்சி முற்றாக வெளியேற வேண்டும் என்று அண்மையில் குறித்த பிரதி அமைச்சரால் கோரப்பட்டிருந்தது.
இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கையை இன்றையதினம் தாங்கள் ஜனாதிபதியிடம் முன்வைக்கவிருப்பதாகவும் குறித்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

