சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதிக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆணைக்குழுவுக்கு இதுவரையில் வழங்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிகமாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் விசேட காவல்துறை படைபிரிவு ஆகியன பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிணை முறி தொடர்பில் பல முக்கிய ஆவணங்கள் அங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

