இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர், மூன்று மாதக் காலப்பகுதியில் இடம்பெற்ற 21 நாடாளுமன்ற அமர்வுகளில் 5 அமர்வுகளில் மாத்திரமே கலந்து கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
மே மாதம் முதல் ஜுலை வரையான காலப்பகுதியில் குறித்த 21 அமர்வுகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே குறித்த 21 அமர்வுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களது செயற்பாடுகள் குறித்த தகவல்களை வெளியிடும் இணையத்தளம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்கின்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு 500 ரூபாவில் இருந்து 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

