போர்க்குற்றங்கள் தொடர்பில் கவலைக் கொள்ள வேண்டியதில்லை என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் தமக்கு தெரிவித்ததாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய குறிப்பிட்டதாக ஐக்கிய நாடுகளின் அங்கீகாரம் பெற்ற ஊடகமான இன்னர்சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ராதிகா குமார சுவாமி உள்ளிட்டவர்கள் தம்மிடம் இவ்வாறு கூறியதாக, ஜகத் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதனை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகளது பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டெரெசின் பேச்சாளர்களிடம் இன்னர்சிட்டி பிரஸ் வினவியுள்ளது.
எனினும் அதற்கு இன்னும் பதில் வழங்கப்படவில்லை என்று இன்னர்சிட்டி பிரஸ் தமது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

