முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிச்சம் என்று அர்த்தப்படும் ‘எலிய’ என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை இன்றை ஆரம்பிக்கிறார்.
இன்று மாலை 4.30க்கு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அரசியல் யாப்பு உருவாக்கம், காணாமல் போனோர் சட்டமூலம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப் படுத்தும் நோக்கிலேயே இந்த அமைப்பு ஆரம்பிக்கப்படுகிறது.

