மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம்

777 0

இந்த வருடத்தின் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின்றன.

இந்த நிலையில் பாடசாலையின் கல்வி செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு, சகல அதிபர்களுக்கும் சுற்று நிரூபம் அனுப்பியுள்ளது.

அதன்படி, பாடசாலையில் சுற்றாடலை சுத்தம் செய்யும் பணிகள் 3 தினங்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விடைப்பத்திரங்களை திருத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளதுடன், முதலாவது கட்டம் நாளை ஆரம்பமாகின்றது.

இரண்டாவது கட்ட திருத்தும் பணிகள் 13ஆம்; திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதுடன், மூன்றாவது தவணை மற்றும் 30ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் முதலாம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளன

முதலாம் கட்ட திருத்த பணிகள் நாடளாவிய ரீதியாக 31 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment