நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விரும்பாமை தொடர்பில் தாம் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் யாப்பை யாரும் விரும்பவில்லை.
அதற்கான அவசியம் தற்போது இல்லை.
புதிய யாப்பின் ஊடாக நிறைவேற்று அதிகரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே தமக்கு வேண்டும் என்று சுதந்திர கட்சி தற்போது கோருகிறது.
ஜனாதிபதியும் இந்த முறைமையை கைவிடப் போவதில்லை என்று கூறி வருகிறார்.
எவ்வாறாயினும், தேர்தல் காலத்தில் மாத்திரம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கக்கூடாது என்று மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

