ரத்துபஸ்வல மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைக்கு ஜகத் ஜெயசூரியவே உத்தரவிட்டார் – ஃபீல்ட் மார்ஷல் 

369 0

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை என்பவற்றுக்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியவே உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.

ரத்துபஸ்வலையில் சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீதும், சிறைக் கைதிகள் மீதும் ஜகத் ஜெயசூரியவே தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக ஜகத் ஜெயசூரிய குற்றமிழைத்ததாகவும் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment