ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட இராணுவத்தினர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, மிகவும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கூட்டமைப்பின்பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா ஒரு அரசியல் வாதியல்ல.
அவர் நாட்டுக்காக பாரிய சேவையாற்றியுள்ளார்.
அவர் இராணுவத்தினர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

