ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்றையதினம் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
வழமையாக செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், உள்ளுராட்சி தேர்தல் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் மாத்திரம் ஆராயப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

