இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் கடற்கண்காணிப்பு படகான வருணா, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்பாதுகாப்பு முகவர் நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 2006ஆம் ஆண்டிலும், 2008ஆம் ஆண்டிலும் வரஹா மற்றும் விக்ரஹா ஆகிய இரண்டு கண்காணிப்பு படகுகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இதன்படி இந்த ஆண்டும் கண்காணிப்பு படகினை இந்தியா வழங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

