சீகா வைரஸை பயன்படுத்தி மூளைப் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் – அமெரிக்க விஞ்ஞானிகள் 

339 0

பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் சீகா வைரஸைக் கொண்டு, மூளைப் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

விலங்குகளுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த வகையான பரிசோதனை வெற்றியளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் தற்போதும் சீகா வைரஸ் அச்சுறுத்தலாக நிலவுகிறது.

குழந்தைகளின் மூளையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸ், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளை பிறக்கச் செய்கிறது.

ஆனால் இந்த வைரஸை வயதுவந்த மூளை புற்றுநோயாளர்களின் மூளையில் செலுத்துவதன் ஊடாக, புற்றுநோயைக் பூரணமாக குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை முறைமை இன்னும் மனிதர்களுக்கு மேற்கொள்ளப்படவில்லை.

Leave a comment