கருக்கலைப்பை சட்டரீதியாக்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமடைவது மற்றும் கருப்பையில் உள்ள சிசுவிற்கு பாரிய நோய் ஏற்பட்டு உடல்நலக் குறைபாடுடன் பிறக்கும் சந்தர்ப்பம் ஆகிய இரண்டு காரணங்களும் கருக்கலைப்பை சட்டரீதியாக்குவதற்கு முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காரணங்களை அடிப்படையாக வைத்து கருக்கலைப்பை சட்டரீதியாக்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும்,இந்த யோசனையானது சுகாதார அமைச்சுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் சுகாதார அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
குறித்த யோசனையானது சுகாதார அமைச்சிடம் முன்வைத்தவுடன் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.
விகாரமான தோற்றம் அல்லது அங்கவீனமான குழந்தைகள் பிறப்பது பாவமான செயல் என்றும்,அதனை கருவிலே அடையாளங் கண்டு அழிப்பது சிறந்தது என்றும் சுகாதார அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

