இந்திய பிரதமர் – சீன ஜனாதிபதி இன்று சந்திப்பு

418 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீனாவின் ஜனாதிபதி சீ ஜின்பின்னுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

சீனாவில் நடைபெறும் ப்ரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த மாநாட்டில் வைத்து பாகிஸ்தானில் செயற்படும் லஸ்கர் ஈ தாய்பா, ஜேஸ் ஈ மொஹமட் மற்றும் ஹக்கானி வலையமைப்பு என்பன தீவிரவாத அமைப்புகள் என்பதை ப்ரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன.

இந்த அமைப்புகளை ஐக்கிய நாடுகளின் தீவிரவாதிகள் பட்டியலில் இணைப்பதற்கு சீனாவே தடையாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

எனவே தற்போது ப்ரிக்ஸ் நாடுகளின் இந்த அறிவிப்பு, சீனாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையும் தொடர்ந்து நிலவுகிறது.

இவற்றுக்கு மத்தியில் இன்றையதினம் இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

Leave a comment