இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் கூட்டு கடற்படை பயிற்சியின் பொருட்டு இரண்டு கடற்படை கப்பல்கள் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளன.
சயுர மற்றும் சாகர என்ற கப்பல்களே நேற்று திருகோணமலை துறைமுகத்தில் இருந்து இந்தியா நோக்கி பயணமாகின.
இந்த கப்பல்கள் இரண்டும் நாளைய தினம் இந்தியாவின் விசாகப்பட்டணம் துறைமுகத்தை சென்றடைவுள்ள நிலையில் கடற்படை பயிற்சிகள் நாளை மறுதினம் ஆரம்பமாகி எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன.
இலங்கை இந்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பொருட்டு மொத்தமாக 368 பேர் இலங்கை கடற்படை சார்பில் பங்கேற்கின்றனர்.

