யுத்த வீரர்கள் என்ற போர்வையில், பிழை செய்தவர்களை பாதுகாப்பது மக்களுக்கு செய்யும் அநீதி என்று மாகாண அபிவிருத்தி அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
யுத்தக் காலத்தில் குற்றம் புரிந்தவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சிலர் தாம் இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர்.
ஆனால் தாம் காட்டிக் கொடுத்திருந்தால், யுத்தத்தை எவ்வாறு நிறைவு செய்திருக்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் நாட்டின் தலைவர்கள் எப்போதும் மக்களின் பக்கமே இருக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

