பொலனறுவை – கதுருவெல பகுதியில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சுமார் 150 குடியிருப்புகள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.
பொலனறுவை கதுருவெல நகர் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.
அதன்போது ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக சுமார் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மின்கம்பங்கள் சரிந்து மின் கம்பிகள் அறுந்துள்ள நிலையில், அங்கு மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதைகள் பலவற்றில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்கள் மீதும் மண் சரிந்து வீழ்ந்துள்ளதான் காரணமாக அவற்றுக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
குடியிருப்புகள் பல மண்ணில் புதையுண்டுள்ளன.
கதுருவெல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அரசாங்க சீமெந்து களஞ்சியசாலைக்கும் காற்றினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் நேற்று இரவு முதல் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், நிலவும் மழையுடனான காலநிலை சில தினங்களுக்கு நீடிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.பொலனறுவையில் கடும் காற்றுடன் மழை – 150 குடியிருப்புகள் பாதிப்பு
பொலனறுவை – கதுருவெல பகுதியில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சுமார் 150 குடியிருப்புகள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.
பொலனறுவை கதுருவெல நகர் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.
அதன்போது ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக சுமார் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மின்கம்பங்கள் சரிந்து மின் கம்பிகள் அறுந்துள்ள நிலையில், அங்கு மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதைகள் பலவற்றில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்கள் மீதும் மண் சரிந்து வீழ்ந்துள்ளதான் காரணமாக அவற்றுக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
குடியிருப்புகள் பல மண்ணில் புதையுண்டுள்ளன.
கதுருவெல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அரசாங்க சீமெந்து களஞ்சியசாலைக்கும் காற்றினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் நேற்று இரவு முதல் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், நிலவும் மழையுடனான காலநிலை சில தினங்களுக்கு நீடிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.