நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கு – சீராய்வு மனு மீண்டும் ஒத்திவைப்பு

475 0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவத்துடன் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கடற்படையைச் சேர்ந்த ஐந்து பேரை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடந்த ஆண்டு குற்றமற்றவர்கள் என்று அறிவித்து விடுவித்தது.

இந்த நிலையில் குறித்த வழக்கை மீளாய்வு செய்யக் கோரி, நடராஜா ரவிராஜின் மனைவி சசிக்கலா ரவிராஜ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று பரிசீலனைக்கு வந்த போது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாக நீதியரசர்கள் தெரிவித்தனர்.

அன்றையதினம் குறித்த மனுவை விசாரணைக்கு எடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment