பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் சட்டத்தரணி நிஹால் ஃபெர்ணாண்டோ, பிணை முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளில் இருந்து விலகவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளையதினம் தாம் அது குறித்து தீர்மானிக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்தின் பிரதமத் தலைவரின் உத்தரவின் அடிப்படையில், அதன் தொடர்பாடல் இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தமது துறைசார்ந்த செயற்பாட்டை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

