பாரிய மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நிறைவு – நீடிக்குமா? நிறைவுருமா? – இன்று தீர்மானம்

256 0
பாரிய மோசடி, ஊழல், அரச சொத்து, சிறப்புரிமை, அதிகாரம் மற்றும் நீதிமன்றத்தை தவறான முறையில் பயன்படுத்தாமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் காலம் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில்  ஆணைக்குழுவின் காலத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ஆணைக்குழுவின் காலத்;;தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எம்.டபிள்யூ குணதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழு 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டது.
முறைப்பாடுகள் பெறுப்பேற்பது 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்பட்டது.
அந்த காலப்பகுதியில் மாத்திரம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் அதிகம்.
எனினும் இந்த ஆணைக்குழுவின் விடயத்திற்கு அமைவான 400 முறைப்பாடுகள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.
அவற்றுள் 17 முறைப்பாடுகள் மாத்திரம் விசாரணை மேற்கொண்டு நினைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் எஞ்சிய முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நிறைவு செய்ய மேலும் 6 மாத காலம் செல்லும் எனவும் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார்.

Leave a comment