3000 மில்லியன் செலவில் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி

253 0

மலையக பெருந்தோட்டங்களில் செயற்படும் வைத்தியசாலைகளை 3000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

கொத்மலை லபுக்கலை தோட்டம் மேற் பிரிவில் கலாச்சரா மண்டப பாதை திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மலையகத்தில் காணப்டும் பெரும்பாலான வைத்தியசாலைகள் பாதிப்படைந்து வசதிகள் உட்பட மருந்துகள் இல்லாத நிலையில் காணப்படுகின்றன.

இதற்கு ஒரு முடிவினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினேன்.

இதன் பயனாக பெருந்தோட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளை 3000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யபடவுள்ளன.

அதற்கான திட்ட வரைபு மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் மேற்க் கொள்ளபட்டு வருகின்றது.

அதேவேளை நுவரெலியா வைத்தியசாலைக்கு 100 தாதியர்களும் 66 வைத்தியர்களும் குறைபாடாக உள்ளனர்.

அதற்காகவும், ஏனைய வசதிகளை செய்வதற்கும் குறைபாடுகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கு 23.09.2017 அன்று நுவரெலியா வைத்தியசாலைக்கு விஜயம் ஒனறினை சுகாதார அமைச்சர் மேற்க் கொள்ளவும் உள்ளார்

ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலைக்கும் விஜயம் செய்து குறைகளை பார்வையிட உள்ளார் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a comment