இராணுவ ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு வழக்கு தாக்கல்

4586 0

தென் அமரிக்காவின் மனித உரிமை அமைப்புக்கள், பிரேசில் மற்றும் ஏனைய ஐந்து லத்தீன் அமரிக்க நாடுகளுக்கான இலங்கைத்தூதுவர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராக வடக்கை தாக்கல் செய்துள்ளது.

தமது இராணுவப்பதவிக்காலத்தின்போது ஜெயசூரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009ஆம்ஆண்டு இறுதிப்போரின்போது வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும்  பலர் காணாமல் போகச்செய்யப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயசூரிய, பிரேசில், கொலம்பியாஈ, பேரூ, சில்லி மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளின் தூதுவராக செயற்பட்டு வருகிறார்
இந்தநிலையில் அவரை குறித்த நாடுகள், இலங்கைக்கு வெளியேற்றவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தாக்கலில் முன்னின்று செயற்படும் சட்டத்தரணியான கார்லோஸ் பெர்ணான்டஸின் தகவல்படி பிரேசிலிலும் கொலம்பியாவிலும் நேற்று ஜெயசூரியவுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வரும் நாட்களில் ஆர்ஜன்டீனா, சில்லி, பெரூ ஆகிய நாடுகளில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் சூரினாமின் அதிகாரிகள் இந்த வழக்கு தாக்கலை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகவும் பெர்ணான்டஸ் குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் ஜெயசூரிய கடந்த ஞாயிற்றுக்கிழமைன்று நாட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிகாரிகளை கோடிட்டு பெர்ணான்டஸ்  தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டுவரையிலான காலப்பகுதியில்  ஜெகத் ஜெயசூரியவின் தலைமையிலான வன்னிப்படையினால், ஒரு லட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.

வன்னி ஜோசப் இராணுவ முகாமில் இருந்து தப்பிவந்த 14பேரின் சாட்சியங்களின் அடிப்படையிலேயே சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் ஜெயசூரியவின் மீது சுமத்தப்பட்டுள்ளன.

Leave a comment