சில குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்ற குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு தெற்கு ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் இந்த குற்றங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
நாட்டில் எந்த பாகத்தில் எந்த குற்றச் செயல் இடம்பெற்றாலும் அந்த குற்றச்செயல்களில் 75 சதவீதத்தையேனும் முழுமையாக நிறைவுசெய்யும் இலக்குடன் காவல்துறை செயற்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டார்.

