ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல் – 13 பேர் பலி

313 0

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் பலியானதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், ஆப்கானிஸ்தான் இராணுவத்தினருடன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படை இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் நவா பிரதேசத்தில் மக்கள் நடமாட்டம் நிறைந்த ஒரு பகுதியில் தீவிரவாதிகள் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தாக்குதலை இதுவரையில் எந்த இயக்கமும் பொருப்பேற்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment