பேரறிவாளன் வீட்டை முற்றுகையிடவுள்ள இந்திய காங்கிரஸ் கட்சி

391 0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இடைக்கால சிறைவிடுவிப்பில் உள்ள பேரறிவாளன் வீட்டை இன்று முற்றுகையிடவுள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் சிறுபான்மை பிரிவு தலைவர் முதசீர் பாஷா இதனை தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிஇருந்த பேரறிவாளன் மீதான வழக்கு இந்திய உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகின்றது.

எனினும், தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றி பேரறிவாளனுக்கு இடைக்கால சிறை விடுவிப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசாங்கத்தை கண்டித்து இன்றைய தினம் பேரறிவாளனின் இல்லம் முற்றுகையிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால சிறைவிடுவிப்பில் உள்ள பேரறிவாளன் தினமும் காவல் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், காவல்துறையினர் அவரது இல்லத்திற்கு சென்று கையொப்பம் பெற்றுக்கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறை விடுவிப்பு மீள பெறப்பட வேண்டும் எனவும் முதசீர் பாஷா வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment