தமிழக மீனவர்களின் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கம் எவ்வித கரிசனையும் இன்றி செயற்பட்டு வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சுமத்தியுள்ளார்.
பாக்கு நீரினையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா மத்திய அரசாங்கம் அது தொடர்பில் எந்த கரிசனையும் இன்றி செயற்பட்டு வருகின்றது.
அத்துடன், இலங்கையுடன் இந்தியா சுமூகமான உறவை கொண்டுள்ளதாகவும் வைகோ கூறியுள்ளார்.

