அமெரிக்க ஜனாதிபதியின் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான விசேட பிரதிநிதி அலைஸ் வெல்ஸ் இன்று இலங்கை வரவுள்ளார்.
இவர் இன்று முதல் எதிர்வரும் இரண்டாம் திகதிவரை டாக்கா இஸ்லாமாபாத் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து பிராந்திய ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்களில் அவர் ஈடுபடவுள்ளார்.
அத்துடன் செப்டெம்பர் முதலாம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள இந்து சமுத்திரவலய நாடுகளின் மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

