சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறும் ஒருநாள் போட்டியின் வெற்றி,தோல்வி குறித்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் இந்தியாவின் மும்பையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சந்தேகநபர்கள் ஜதராபாத்,டில்லி மற்றும் மும்பாய் உள்ளிட்ட நகரங்களில் குறித்த சூதாட்டத்தினை முன்னெடுத்து வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்து 13 கையடக்கத்தொலைபேசிகள்,மடிக்கனிணிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மும்பை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

