கிளிநொச்சி முகமாலை பகுதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் காயமடைந்தனர்.கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அன்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இந்திராபுரம் கிராமத்தில் நேற்று மாலை இவ்வாறு வெடி விபதது இடம்பெற்றுள்ளது.
இதன்போது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்தனர்.
கிளிநொச்சி பளை இந்திராபுரத்தில் புதிதாக மீள் குடியேற்றம் செய்யப்பட்ட இடத்தில் குப்பைக்கு தீ வைத்தபோது அதில் இருந்த மர்மபொருள் வெடித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



