இந்தியாவின் தனுஸ்கோடியை அடுத்துள்ள கம்பிப்பாடு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 140கிலோ கஞ்சா பொதிகளை தனுஸ்கோடி பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளதாக எமது தமிழக செய்தியாளர் தெரிவித்தார்.
தனுஸ்கோடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த கஞ்சா பொதிகள் கடற்கரை மணலினுள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த கஞ்சா பொதிகளின் மொத்த தொகை இலங்கை மதிப்பின்படி சுமார் 1கோடி 40 இலட்சம் ரூபாய்கள் எனவும் இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்காக தனுஸ்கோடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

