அரசாங்கம் இன்று நிறைவேற்றிய உள்ளுராட்சி மன்றத்திற்கான புதிய தேர்தல் சட்டத்தின் மூலம் அரச பணியாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, டளஸ் அலகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயகார ஆகியோர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

