ஹஜ் பெருநாள் – உயர்தர பரீட்சையின் மாற்றம்

381 0

ஹஜ் பெருநாள் காரணமாக கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் தகவல் தொழில்நுட்ப பாட பரீட்சையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த தகவல் தொழில்நுட்ப பாடத்தின் 2 ஆம் பகுதி செப்டம்பர் 4ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அன்றைய தினம் காலை 8.30 இருந்து 11 மணிவரையில் பொது அறிவு பரீட்சை இடம்பெறவுள்ளதுடன், பி;ற்பகல் 12.30 இருந்து 3.30 வரையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப பாடத்தின் 2ஆம் பகுதி இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

Leave a comment