போலி ஆவணங்களை வைத்திருந்த இருவர் கைது

380 0

போலி ஆவணங்களை வைத்திருந்த 2 சந்தேகத்துக்குரியவர்கள் ராகமை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்ற புலனாய்வு பிரிவினர் அவர்களை கைது செய்யதுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து, போலி வாகன உறுதிப்பத்திரம், போலி வாகன சாரதி அனுமதி பத்திரம் மற்றும் போலி வாகன இலக்க தகடுகள் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டுள்ளன.

அவர்களில் ஒருவர், களணி பிரதேச செயலகத்தில் வாகன ஓட்டுனராக கடமை புரிபவர் எனவும் மற்றையவர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி எனவும் தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment