வட இந்திய பஞ்சாப்பில் ஆன்மீகவாதி என கருதப்படும் ஒருவர் குற்றவாலியாக இனங்கானப்பட்டுள்ளார்.
குர்மீற் ராம் ரஹீம் சிங் என அழைக்கப்படும் அவர் கடந்த 2002ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
விசாரணைகளின் போது இது உறுதிப்படுத்தப்பட்டதனை அடுத்து அவருக்கு தண்டனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தண்டனை குறித்த விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், நீதிமன்றத்தை சுற்றவுள்ள பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் இராணுவ தரப்பினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்டனை வழங்கப்பட்டவரை பின்பற்றுவோர் வன்செயலில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பாதுகாப்பு பணிகள் முனைப்புடன் மேற்கொள்ளபபட்டிருந்தன

