தமிழகத்தில் 19 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் : பள்ளி கல்வித்துறைக்கு முதன்மை செயலாளர் பதவி அறிமுகம்

400 0

தமிழகத்தில் நான்கு மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, நேற்றிரவு கடலூர், சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய நான்கு மாவட்ட கலெக்டர்களை அதிரடியாக மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தற்காலிக முதன்மை செயலாளார் என்ற பதவி பள்ளிக் கல்வித் துறை, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளம் உள்பட சில துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் உதயசந்திரன் செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் முதன்மை செயலாளர் பதவி ஒன்றை தற்காலிகமாக உருவாக்கி, அப்பதவியில் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் கீழ் பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் செயல்படுவார் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. உதயசந்திரன் பாடதிட்டங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. எல்காட் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திரகுமார் தொழில் மற்றும் வர்த்தக துறையில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள முதன்மை செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தாட்கோ முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் துணை செயலாளர் பழனிச்சாமி பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதன்மை செயலாளர் கோபால் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள முதன்மை செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் அசோக் டோங்ரே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியத்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக இயக்குனர் ராஜேந்திர ரத்னு பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பழனிசாமி ஐஏஎஸ் தொழில்நுட்ப கல்வியின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பை வகிப்பார். மாவட்ட முகமை திட்ட அலுவலர் ரோகினி சேலம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் கலெக்டர் சம்பத் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை இயக்குனர் லதா சிவகங்கை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை கலெக்டர் மலர்விழி, தமிழக உள்துறை, கலால் துறையின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை கலெக்டர் பிரசாத் வாட்நீரே கடலூர் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் கலெக்டர் ராஜேஷ் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர்(கல்வி) கந்தசாமி திருவண்ணாமலை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காதி மற்றும் கிராமஉத்யோக் பவன் மேலாண்மை இயக்குனர் சுடலை கண்ணன் எல்காட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் சுதா தேவி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்சாலை மற்றும் வர்த்தக துறையின் கூடுதல் ஆணையராக இருந்த ரீடா ஹரிஸ் தாக்கர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவராக அண்ணாமலை ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment