இலங்கை அணியின் முன்னாள் விக்கட்காப்பாளர் குமார் சங்கக்காரவின் சாதனையை இந்திய அணியின் விக்கட்காப்பாளர் மகேந்திர சிங் தோனி சமப்படுத்தியுள்ளார்.
சங்கக்கார 404 ஒருநாள் போட்டிகளில் ஸ்டம்ப் மூலம் 99 ஆட்டமிழப்புகளை செய்துள்ளார்.
இதுவே அதிகமான ஸ்டம்ப் ஆட்டமிழப்பாகவும் காணப்பட்டது.
இந்தநிலையில், சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் நேற்று கண்டி பல்லேகலையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனி தனுஸ்க குணவர்தனவை ஆட்டமிழப்பு செய்தார்.
இதன் மூலம் 298 போட்டிகளில் 99 ஆட்டமிழப்பை மேற்கொண்டு சங்காவின் சாதனையை தேனி சமப்படுத்தியுள்ளார்.
எனினும் ஒருநாள் போட்டிகளில் 482 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டுள்ள குமார் சங்கக்கார முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாம் இடத்தில் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் கில் கிரிஸ்ட் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

