சுற்றுலா இந்திய அணியுடனான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தாலும், தமது அணிக்கு ரசிகர்கள் பாரிய ஒத்துழைப்பை வழங்கியதாக இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.
எமது அணி வெற்றிப்பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பதைப் போன்று அணி வீரர்களும் வெற்றியைப் பெறும் எதிர்பார்ப்பிலேயே மைதானத்திற்குள் இறங்குவதாகவும்,வெற்றி என்பது அதிர்ஸ்டத்தைப் பொறுத்தே உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது அணிக்கு பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் நிறுவனம் என்பன தேவையான அனைத்தையும் செய்துள்ளதாகவும் தரங்க தெரிவித்துள்ளார்.

