இலங்கையின் புதிய நீதி அமைச்சராக இன்றையதினம் தலதா அத்துகோரல பதவி ஏற்பாhர் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு விடுத்த கோரிக்கை அடிப்படையில் ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டார்.
இந்தநிலையில் புதிய நீதியமைச்சராக தலதா அத்துகோரல நியமிக்கப்படவுள்ளார்.
அதேநேரம் புத்தசாசன அமைச்சராக காமினி ஜெயவிக்ரமபெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இவர்கள் இருவரும் இன்று முற்பகல் பதவியேற்பர் என்று தெரிவிக்கப்படுகிறது

