மீண்டும் பாகிஸ்தானில் சென்று விளையாட மாட்டேன் – திலான் சமரவீர

312 0

தான் இலங்கை அணியில் வீரராக விளையாடும் சந்தர்ப்பம் கிடைக்குமானால் மீண்டும் ஒரு தடவை பாகிஸ்தானிற்கு சென்று விளையாடமாட்டேன் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த வேளை லாகூர் நகரில் வைத்து இலங்கை அணி வீரர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இருந்து தான் இன்னும் மீளவில்லை என இந்த சம்பவத்தில் பாரிய காயங்களுக்கு உள்ளான திலான் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஸ் அணியின் தற்காலிக பயிற்சியாளராக கடமையாற்றிய திலான் சமரவீர பி.பி.சி. செய்தி சேவைக்கு வெளியிட்டுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டிற்கு பிறகு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு செல்லவுள்ள நிலையில்,அங்கு செலவ்வதற்கு வீரர்கள் மறுப்பு தெரிவிப்பார்களாயின் அவர்களது விருப்பதற்கு இடமளிக்குமாறும் திலான் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாரிய காயங்களுக்கு உள்ளான திலான் சமரவீரவின் காலில் ஏற்பட்டிருந்த காயங்கள் குணமடைய 4 மாதங்கள் சென்றதுடன், குறித்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து மனதளவில் குணமடைய பல காலங்கள் சென்றதாகவும் திலான் சமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment