நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறாததற்கு எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்,
இந்த விவகாரத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து இன்று சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
அதன்படி இன்று சேப்பாக்கத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கனிமொழி எம்.பி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு நல்லக்கண்ணு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

