தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற வேன் ஒன்று, அதே திசையில் சென்ற லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளை, வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறி மற்றும் பாதையின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் வேனின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஆறு பேர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலை மற்றும் களுத்துறை நாகொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரஸ்ஸை, பொரலெஸ்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், விபத்து சம்பந்தமாக எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

