தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை! – அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன

231 0

பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக நியமனம் பெற்றுள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். 

இன்று காலை அங்கு சென்ற அவர் மல்வத்து அஸ்கிரி பீட மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

இதன்போது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசியல்வாதிகள் வௌியிடுகின்ற கருத்துக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதல் வழங்கிய ரவீந்திர விஜேகுணரத்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டல் யுத்தம் ஆரம்பமான நாள்முதல் யுத்தத்தில் வெற்றியடையும் வரை இருந்த பலர் இன்றும் பாதுகாப்பு பிரிவுகளில் இருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு தொடர்பில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது தொடர்பில் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன கூறியுள்ளார்.

Leave a comment