இளம் யுவதி கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

339 0

கிரிபாவ பொலிஸ் பிரிவில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

சாலய அசோகபுரவில் வசிக்கும் 17 வயதுடைய யுவதியே கொலை செய்யப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கிரிபாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a comment