சத்தியத்தை மறைப்பதற்காக அசத்தியத்தை பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் அஜித் பி. பெரேரா விஜயதாஸ ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைச்சரவையில் இருந்தது வெட்கப்பட வேண்டிய விடயமாக இருந்தால், ஜயதாஸ ராஜபக்ஷ ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்படும் வரையில் பதவியை இராஜினாமா செய்யாதிருந்தது ஏன் என்று அவர் கூறியுள்ளார்.
விஜயதாஸ ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கூறிய விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அஜித் பி. பெரேரா இதனைக் கூறினார்.

