செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியான் குணதில கூறியுள்ளார்.
முதல் தடவையாக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள இருப்பவர்களுக்கு இந்த வகை அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வகை அடையாள அட்டைக்காக புதிய புகைப்படம் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியான் குணதில கூறியுள்ளார்.

