உயர் தர பரீட்சை வினாத்தாள் சம்பவம் – கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்

322 0

தொழில்நுட்ப கருவியைப் பயன்படுத்தி உயர் தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாளினை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உயர்தர மாணவர் மற்றும் அவரது தந்தையும் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நேற்று கம்பஹா நீதவான் டீ.ஏ.ரூவான் பத்திரன முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் குற்றப்பபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டனர்.

கம்பஹாவில் இரசாயனவியல் வினாத்தாள் தொடர்பில், மாதரி வினாத்தாள் வெளியானமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a comment