ரஷ்யாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய இலங்கை விருப்பம்

266 0

ரஷ்யாவின் ஆயுதங்களையும் கப்பல்களையும் கொள்வனவு செய்ய இலங்கை ஆர்வமாக இருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவில் நடைபெற்ற ‘ஆமி 2017’ அமர்வில் பங்கேற்றபோது ஸ்புட்டிங் செய்தி சேவைக்கு இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

தாம் குறித்த அமர்வுக்கு வந்தமையானது ரஷ்யாவின் கப்பல்களையும் ஆயுதங்களையும் கொள்வனவு செய்வதற்காகவே என்று வைத்தியரட்ன குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கை, ரஷ்யாவின் ஆயுதங்களை கொள்வனவு செய்த அனுபவத்தை கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் ரஷ்யாவுக்கு வந்தமையை சிறந்த சந்தர்ப்பமாக கொள்வதாக வைத்தியரட்ன தெரிவித்துள்ளார்.

Leave a comment