நெருக்கடிக்கு ஜே வி பி யிடம் மாத்திரமே தீர்வு – அனுரகுமார

575 0

anura-kumara-தற்போதைய அரசாங்கத்தினுள் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடன்மூலமான நிதி நெறுக்கடி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொறுளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெறுக்கடி, உற்பத்தி துறையின் வீழ்ச்சி, அரச நிறுவனங்களுக்கான வருமான வீழ்ச்சி, இலாப பங்கீட்டில் முரண்பாடு என்ற 5 பிரதான பிரச்சினைகள் உள்ளன.

இந்த 5 பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்காத நிலையில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் பயனில்லை.

இந்தநிலையில், இந்த 5 பிரதான பிரச்சினைகளுக்கும் ஜேவிபியிடம் மாத்திரமே தீர்வு உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.