காணாமல் போனோர் அலுவலகம் – பிரித்தானியா வரவேற்பு

306 0

british_1காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் தகவல்களை கண்டறிவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும்.
அதேவேளை, நல்லிணக்கத்துக்கும் வாய்ப்பு உண்டாகும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் நிலைமை தொடர்பில் இந்த அலுவலகம் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
அத்துடன் விசாரணைகளுக்காக அதிக காலம் எடுக்கும் என்ற போதிலும் விடாமுயற்சி அவசியம் என்றும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.